செட்டிநாடு குழுமத்தின் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்புடைய கணக்குகளில் இருந்த 360 கோடி ரூபாய் வைப்பு நிதி பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வந்ததில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும், டான்ஜெட்கோ முன்னாள் அதிகாரிகள் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்தது விசாரித்து வந்தது.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, சென்னையில் கடந்த 24-ம் தேதி செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் டான்ஜெட்கோ அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இதில், டிஜிட்டல், சொத்து ஆவணங்கள் மற்றும் 360 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.