தங்கத்தின் தரத்தை அறியும் வகையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் HUID எனப்படும் 6 இலக்க ஹால்மார்க் அடையாள எண்கள் உள்ள நகைகளை மட்டும் விற்க அனுமதிக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேட்டியளித்த பி.ஐ.எஸ். சென்னை பிரிவு தலைவர் பவானி, இதற்கு முன் நகைகளின் மீது ஹால்மார்க் முத்திரை, அதன் தரம், நகை செய்த நிறுவனத்தின் பெயர் மட்டுமே பொறிக்கப்படும் நிலையில், இனி 6 இலக்க எண் கட்டாயம் என தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் 288 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 26 மாவட்டங்களிலும் HUID எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பவானி, அடையாள எண் இல்லாமல் விற்றால் நகையின் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.