ப்ரீத் அனலைஸர் கருவி விவகாரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுமா என ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு தயாரித்த நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் காவல்துறையினர் நடத்திய இரவு வாகன தணிக்கையின் போது, தீபக் என்பவர் குடிபோதையில் இருந்ததாக ப்ரித் அனலைஸர் கருவி மூலம் பரிசோதனை செய்ததில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தனக்கு குடிப்பழக்கம் இல்லை என அவர் வாதிடவே சிறிது நேரத்தில் மீண்டும் அதே கருவி மூலம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இல்லை எனத் தெரிய வந்தது.
இதனால் வாகன தணிக்கையில் பயன்படுத்தப்பட்ட பிரீத் அனலைசர் கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அதனை தயாரித்த நிறுவனத்திற்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரீத் அனலைசர் சோதனையில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் கழித்து மீண்டும் மறுமுறை பரிசோதனை செய்து கொள்ளலாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.