சென்னை அரும்பாக்கத்தில் மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை மற்றும் பணம் கொள்ளையடித்த வழக்கில் கைதான கொள்ளையர்கள் இருவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது.
வாடகைக்கு வீடு கேட்பது போன்று நடித்து, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் உமாசங்கரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை கட்டிவைத்து 40 சவரன் நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் மணிகண்டன், துரைசிங்கம் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்த போலீசார், மூதாட்டியை நிர்வாணமாக செல்போனில் வீடியோ எடுத்த துரைசிங்கம், துரைபாண்டியன் ஆகியோரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அப்போது, இருவரும் தப்பியோடி உள்ளனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றபோது கொள்ளையர்கள் சுவர் ஏறி குதித்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டது.