தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அறிவித்த நிலையில், எந்த அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டபேரவை நிதிநிலை அறிக்கையை, மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு உட்பட பல்வேறு காரணங்களுக்காக புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.