ஒன்றேகால் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்தனை கைது செய்த கோவை போலீசார், தலைமறைவாகியுள்ள அவரது மனைவியை தேடி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு பல் மருத்துவர்களான அரவிந்தனும் அவரது மனைவி துர்கா பிரியாவும் அறிமுகமாகியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி தொழில் செய்துவருவதாக கூறிய மருத்துவ தம்பதி, துருக்கியிலிருந்து ஆப்பிள் கண்டெய்னர் வருவதாகவும், அதற்கு 1 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் 2 கோடி ரூபாய்க்கு விற்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதனை நம்பி 1 கோடியே 24 லட்சம் ரூபாயை ரமேஷ் கொடுத்துள்ளார். ஆப்பிள் கண்டெய்னர் வராததுடன், பணமும் திருப்பி தராததால், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ரமேஷ் புகார் அளித்தார். அரவிந்தனை கைதுசெய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.