விடைத்தாள் திருத்தம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவது தொடர்பாக சில கல்வி நிறுவனங்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
அப்பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளில் 3,5,7 ஆகிய செமஸ்டர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்காத கல்லூரிகளின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மாணவர்களிடம் பெற்ற தேர்வு கட்டணங்களை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்காத கல்லூரிகளின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.