சென்னையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீண்டும் கத்தியால் காவலர்களை வெட்டி தப்ப முயன்றதால், போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
அயனாவரம் பகுதியில் கடந்த 20ம் தேதி வாகன தணிக்கை செய்த காவல் உதவி ஆய்வாளர் சங்கரை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பலொன்று கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது.
சிசிடிவி காட்சிகளின்படி விசாரணை நடத்தி கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பேண்ட் சூர்யா என்பவனை திருவள்ளூரில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால், உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியால் சூர்யாவின் முழங்கால் பகுதியில் சுட்டுப் பிடித்தார்.