சென்னை ஆயிரம் விளக்கில் பாழடைந்த கட்டடத்தை இடிக்கும்போது, சுவர் விழுந்ததில் சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்த மதுரையை சேர்ந்த 22 வயது இளம்பெண் பத்மபிரியா, இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கட்டடம் இடிக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகரன், ஜே.சி.பி ஆப்ரேட்டர் பாலாஜி ஆகியோரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள கட்டடத்தின் உரிமையாளர் சையது அலி பாத்திமா உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்