திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்தில் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.
ராமஜெயம் கொலை குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவினர், கொலை நடந்த காலக்கட்டத்தில் சந்தேகப்படும் படியாக, 12 ரவுடிகளின் செல்போன் இணைப்புகள் ஆக்டிவாக இருந்ததை அடிப்படையாக கொண்டு, அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
அதன் படி, இன்று சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்தில் ஆஜரான மோகன்ராம், நரைமுடி கணேஷ், சத்யராஜ், தினேஷ் ஆகிய 4 பேரிடம் சோதனை நடத்தப்படுகிறது.
சந்தேகப்படும் நபர்களிடம் 15க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அப்போது அவர்களது நாடித்துடிப்பு மற்றும் பிற உடல் அளவீடுகளை கொண்டு அவர்கள் கூறும் பதில் உண்மையா அல்லது உண்மைக்கு புறம்பானவையா என்பது கண்டறியப்படுகிறது.