சென்னையில் ஆளுநர் மாளிகை மைதானத்தில், வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட சென்சார் பொருத்திய பலூன் விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் அருகே நேற்று இரவு விளக்கு எரிந்த நிலையில் ஒரு மர்மப் பொருள் பறந்து வந்து விழுந்துள்ளது.
இதனை கண்ட பாதுகாப்பு ரோந்து காவலர்கள் உடனடியாக சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார், அந்த மர்ம பொருளை தீவிரமாக சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு இல்லை என தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட சென்சார் பொருந்திய பலூன் காற்றின் வேகம் குறைந்ததால் ஆளுநர் மாளிகை மைதானத்தில் விழுந்தது தெரியவந்தது.