மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 1,000 ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காட்சியை திறந்து வைத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.