சென்னை திருவொற்றியூரில் மது பாட்டிலுக்காக 20 அடி உயரத்தில் ரயில்வே நடைபாதை இரும்பு கம்பியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நடைபாதைக்காக அமைக்கப்பட்டிருக்கும் 20 அடி உயரத்தின் மேலே இருந்த இரும்பு கம்பியில் இளைஞர் ஒருவர் அமர்ந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் மதுபாட்டிலை கேட்டதால் அதனை வாங்கி கொடுத்தும் கீழே இறங்கவில்லை. இந்த நிலையில் திடீரென போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அந்த கம்பியினுள் ஏறி குதித்து அந்த இளைஞரை லாவகமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கினர்.