சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.
மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது முதல் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் மூலம் மட்டுமே 63 ஆயிரத்து 130 பேர் முன்பதிவு செய்திருந்தனர் .
மொத்தம் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.