நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றார் போல புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, நீதித்துறையின் அணுகு முறையை எளிமையாக்க வேண்டும் என்று தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாதிரி விசாரணை போட்டிக்கான நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய ஆளுநர், ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு அரசியலமைப்பு சட்டம் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.