சென்னை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்ட பிறகும் இப்போது உள்ள விமான நிலையமும் செயல்படும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், இப்போது உள்ள விமான நிலையத்தை விரிவுப் படுத்துவதற்கு 400 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால் அதனை விரிவாக்கம் செய்ய முடியவில்லை என்றார்.
சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க 11 இடங்களை தேர்வு செய்து இறுதியாகவே பரந்தூர் முடிவு செய்யப்பட்டது என்றும் தங்கம் தென்னரசு கூறினார்.
மேலும் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்க பணிகள் நடை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.