சென்னை திருவொற்றியூரில் பட்டாசு தீப்பொறி பட்டு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அடையாறைச் சேர்ந்த சங்கர் என்பவர் ராஜாஜி நகரில் சொந்தமாக பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். நேற்று மாலை திடீரென அந்த பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ அருகில் இருந்த 3 வீடுகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீர ர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் பட்டாசு தீப்பொறி பட்டு தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.