சென்னையை அடுத்த வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடந்த சாலை விபத்தில் அண்ணன் தம்பி உட்பட 3 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.
மாங்காடு அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு கம்பிகளில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த இருவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும் அவர்கள் இருவரும் சகோதரர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.