போட்டித் தேர்வுகள், பணியாளர் தேர்வு குறித்த விவரங்களை தேர்வர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஆன்ட்ராய்டு கைப்பேசி செயலியை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல் ஆப்பை தேர்வகள் பதிவிறக்கம் செய்து யுபிஎஸ்சி-யின் போட்டித் தேர்வுகள், தேர்வு தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, அறிவிப்புகள், முடிவுகள் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
எனினும், இந்த செயலி மூலமாக விண்ணப்பப் பதிவு எதுவும் செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.