சென்னை புழல் அருகே தூக்கு மாட்டிக் கொள்வது போல் விளையாட்டு காட்டிய சிறுவன், கழுத்தில் சேலை இறுக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தான்.
புத்தகரம் பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் 11 மற்றும் 14 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தார். அமுதா நேற்று வீட்டில் இல்லாத நேரத்தில் இரு மகன்களும் விளையாடியபோது, இளைய மகன் கார்த்திக், மின்விசிறியில் தூக்கிட்டு சகோதரனுக்கு நடித்துக் காட்டியதாக சொல்லப்படுகிறது.
ஜன்னல் வழியே இதனை அவரது சகோதரர் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென கழுத்தில் சேலை இறுக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். உள்பக்கமாக தாழிடப்பட்டதால் கதவு உடனடியாக திறக்க இயலாத நிலையில், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.