எம்.பி.பிஎஸ்.,பி.டி.எஸ்.உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் எழுதிய நிலையில், 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த வட்சா ஆஷிஷ் என்ற மாணவர் 2-ஆம் இடத்தையும், கர்நாடகாவைச் சேர்ந்த ஹிரிஷிகேஷ் நக்பூஷண் என்ற மாணவர் 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் 30-வது இடத்தையும், ஹரிணி என்ற மாணவி 43-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.