சென்னையில் இன்று நடைபெற உள்ள புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தடைந்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.
ராயபுரம் பாரதி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த கெஜ்ரிவாலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர்.