சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை அனுமதியுடன் கடந்த 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்பட்ட பெரும்பாலான சிலைகள் இன்று முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
இதையொட்டி அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம்-சீனிவாசபுரம், நீலாங்கரை-பல்கலைநகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் உள்ள கடற்கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பேரில் சில சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.