ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ செயற்கைக்கோள் அழைப்பு வசதி கொண்டிருந்தால் இந்தியாவில் விற்பனைக்கு வராமல் போக வாய்ப்பு உள்ளது.
சர்வதேச சந்தைக்கு ஐபோன் 14 ப்ரோ செப்டம்பர் 7 ஆம் தேதி வரவுள்ளது. இந்தியாவில், சிறப்பு அனுமதிகள் இல்லாமல் செயற்கைக்கோள் ஃபோன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆப்பிள் வெளியிடும் ஐபோன் 14 புரோ வருங்காலத்தில் சாட்டிலைட் தொடர்பு அம்சம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்போன் சேவை இல்லாத இடத்திலும் அவசர குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியையும் இந்த வகை ஐபோன் கொண்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.