சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே செயல்பட்டு வரும் குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறையினர், அங்கு செயல்பட்டு வந்த சொகுசுவிடுதி உள்பட பல்வேறு கட்டடங்களுக்கு சீல் வைத்தனர்.
பாப்பான்சத்திரத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவில், அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமித்த புகாரில் அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், பொழுதுபோக்கு பூங்காவில் ஆக்கிரமிப்பில் இருந்த 32.41 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள், அங்கு செயல்பட்டு வந்த நீச்சல் குளம், வாட்டர் பார்க், 5 சொகுசு விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு சீல் வைத்தனர்.