கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும், பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு நாளையே வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை அதன் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு, அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படவுள்ளன.
அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து, வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.