தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 மாணவ- மாணவிகளும், புதுவையில் 14 ஆயிரத்து 627 மாணவ-மாணவிகளும் பொதுத் தேர்வு எழுதவுள்ளனர்.
பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் ஆள் மாறாட்டம் செய்தால், தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.