சென்னை மாதவரம் நீதிமன்றத்தில் பட்டா கத்தியோடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
விக்னேஸ்வரன் என்பவர், மது அருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பியபோது 3 பேர் தாக்கியதாகப் போலீசில் புகாரளித்தார். அவரை தாக்கிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவர்களை பழி வாங்க விக்னேஸ்வரன் நீதிமன்றத்திற்கு பட்டா கத்தியுடன் வந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் விக்னேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மாதவரம் ரவுண்டானா அருகே வைத்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.