சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என மாநகராட்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி உயர்வை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்கும் பணியை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெருக் கட்டணமானது, 6% அல்லது 5 ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், புதிய மதிப்பீடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தெருக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டே சொத்து வரியை சென்னை மாநகராட்சி நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.