சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான மன்ற கூட்டம் காலை 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் தலைமையிலும், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்கிறார்.
அவர் நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படித்து முடித்தப்பின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிடுகிறார். சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகரை அழகுப்படுத்துதல், தரமான சாலைகள் போன்ற முக்கிய அம்சங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.