சென்னையில் ரிமோட் மூலம் போக்குவரத்து சிக்னல்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சென்னையில் விரைவில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதனால், சிக்னலை இயக்கும் கட்டுப்பாடு கருவி அருகே போலீசார் நிற்காமல், சாலையின் பல்வேறு பகுதிகளில் நின்று போக்குவரத்தை சீர்படுத்தி கொண்டே சிக்னலை இயக்க முடிகிறது.
அதற்கான சோதனை ஓட்டமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரிசையாக அமைந்துள்ள 5 சிக்னல்களை ரிமோட் மூலம் இயக்கி போக்குவரத்து போலீசார் ஒத்திகை மேற்கொண்டனர்.