சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்குத் தமிழ்நாடு மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
கிரிக்கெட் மைதானத்தை 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கவும் புதுப்பிக்கவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டிசம்பரில் தமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதன்மூலம் மைதானத்தின் பரப்பு 62ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக அதிகரிக்கப்படுவதுடன், கூடுதலாக 36ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கிடைக்கும்.
மரங்களை வெட்டக் கூடாது என்பது உள்ளிட்ட 18 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.