சென்னை தரமணி இணைப்புச் சாலையில் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள டி.எல்.எஃப் தொழில் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் டி.எல்.எப் Downtown என்ற பெயரில் கட்டப்படும் இந்த தொழில் பூங்காவில், Standard chattered நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகம் உட்பட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் அமையவுள்ளன.
மேலும், புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் அமைப்பு மற்றும் செயல்முறை, பணியாளர்களின் பணி சூழல் உள்ளிட்டவை உலகளாவிய தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், பின்னர் இந்த கட்டடத்தின் மாதிரியை பார்வையிட்ட்டார்.
இதன் மூலம் 2025 ஆம் அண்டிற்குள் 20 லட்சம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.