நீட் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது உச்ச வரம்பை நீக்கி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்து ஆணைய செயலாளர் புல்கேஷ் குமார், தேசிய தேர்வு முகமையின் மூத்த தலைவருக்கு எழுதிய கடித்தத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் நான்காவது கூட்டத்தில் அதிகபட்சம் வயது வரம்பை நீக்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.