சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வன விலங்குகளின் உணவு தேவை மற்றும் பராமரிப்புக்கு சிறப்பு நிதியாக 6கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அங்குள்ள வன விலங்குகளின் உணவு, பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் என மாதத்திற்கு ஒரு கோடியே 28லட்சம் ரூபாய் ஆகும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக, பூங்கா தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதிலும் அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவுக்கு நிதி ஒதுக்குமாறு முதன்மை வன பாதுகாவலர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று தமிழக அரசு சிறப்பு நிதியாக 6கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.