சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக கூறப்படும் விவகாரத்தில், அரசியல் கட்சி பிரமுகர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தனது ஆதரவாளர்களுடன் கத்தியோடு வாக்குச்சாவடிக்குள் புகுந்த திமுக பிரமுகர் கதிரவன் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தி வாக்காளர்களை வெளியேற கூறி தகராறில் ஈடுப்பட்டார்.
இந்த விவகாரத்தில் கதிரவன் மீதும் அவருடன் உடன் வந்தவர்கள் மீதும் அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்து அமைதியை சீர்குலைத்தல், தேர்தல் விதியை மீறுதல் ஆகிய 3 மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கதிரவனை தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ககன் தீப் சிங் பேடி மாநில தேர்தல் ஆணையருக்கு அறிக்கை அளித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் எனவும் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.