சென்னையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் படி, சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டிற்கும், மறுமார்கத்திலும் ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.