சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் 22ல் முனீஷ்வர்நாத் பொறுப்பேற்றார். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணியிடம் காலியாக இருந்ததால் மூத்த நீதிபதியான முனீஸ்வரர்நாத் பண்டாரி பொறுப்புத் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் முனீஷ்வர்நாத் பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமிக்க அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.
அதனை ஏற்று முனீஷ்வர்நாத் பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அவரது பதவிகாலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.