சென்னையில் கொரோனா பரவலால் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அடிக்கடி தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக கடலில் சேரும் குப்பைகளின் அளவு குறைந்திருப்பதால் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் குறைவான ஆழத்திலேயே தென்பட தொடங்கியுள்ளன.
சென்னையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிப்பள்ளியை நடத்தி வரும் அரவிந்த் என்பவர் நீலாங்கரை கடலில் 18 மீட்டர் ஆழத்தில் நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது வழக்கத்திற்கு மாறாக கோரல்,சினப்பர், பெதர் கோரல், சிஃபேன், ஹாட் கோரல் உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதை பார்த்ததும் அவற்றை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.