சென்னை மடிப்பாக்கத்தில் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அந்த கும்பலின் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வைத்து கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திமுக நிர்வாகி செல்வத்தை கொலை செய்ய சொன்னது யார் என கூலிப்படை தலைவன் முருகேசனுக்கு தான் தெரியும் என கைதானவர்கள் கூறியதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.