பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், புறநகர் ரயில்களுக்கான டிக்கெட்டை வாங்கும் போதே இரு டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அளித்துள்ள நிலையில், சான்றிதழ் தேவையில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.