தமிழகத்திலுள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 4 ஆயிரத்து 349 இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 650 இடங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், ஆயிரத்து 930 பிடிஎஸ் இடங்களுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. இதனை அடுத்து வரும் 27-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
அதன் தொடர்ச்சியாக 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnmedicalselection.org/ , https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய இணைய தளங்களில் காணலாம்.