சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுடன் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது.
நாளை காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் கோயில் நடை திறக்கப்படும்.
ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.