சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 30 விழுக்காடாக உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொற்று பரவலின் தன்மை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை மேற்கொள்வதில் ஏறத்தாழ 9 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாவதால் கொரோனா பரவல் விகிதம் 29முதல் 30 விழுக்காடாக கடந்த இரண்டு நாட்களாக நீடிக்கிறது என்றும் மாநகராட்சி சார்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.