ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை காசிமேடு மீன் சந்தையில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மீன்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காலை முதலே மக்கள் குவிந்தனர். இதனால் மீன்கள் விலையும் அதிகரித்து விற்பனையானது.
நேற்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் 600 ரூபாய்க்கும், சங்கரா 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும், நெத்திலி 250 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்டிலும் அதிலாலை முதலே மக்கள் மீன் வாங்க ஆர்வம் காட்டினர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்ததோடு, மீன் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பட்டினம்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.