போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் உறுதியாக கைவிடப்படும் என்றும் அவர்களின் பதவி உயர்வில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சரிசெய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்றும் அதன் பின் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
பணியில் இருக்கும்போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிபெறும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களையும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு தயாராகி வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.