வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மீண்டும் தக்காளி விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆந்திரா , கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கபட்டு தக்காளி வரத்து குறைந்ததால் கடந்த வாரம் 160 ரூபாய் வரை சில்லரை வியாபாரத்தில் விற்பனை ஆனது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 10 லாரிகளில் தக்காளி வந்ததால் விலை 40 ரூபாயாக குறைந்தது. மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவரப்படும் தக்காளி லாரிகளுக்கு போக்குவரத்து செலவுகள் கட்டுபடி ஆகாததால் 4 வது நாளாக லாரிகள் வரவில்லை. இதன் காரணமாகவே தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.