மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, வி.கே.சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்து, சசிகலாவுக்கு ஆதரவாக அமமுகவினர் கோஷம் எழுப்பிய நிலையில், பதிலுக்கு அதிமுகவினரும் கோஷம் எழுப்பியதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு உருவானது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கார் செல்லும் போது, அதே மாதிரி வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சென்றதாக கூறப்படும் கார் மீது கூட்டத்தில் இருந்த சிலர் காலணியை வீசியதாக சொல்லப்படுகிறது.