சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்ற நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ளதாலும் தலைமை நீதிபதி பணியிடம் காலியாக உள்ளதாலும் தலைமை நீதிபதியின் பணிகளை அவர் கவனிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.