தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளினால் சென்னையில் நிலவும் சராசரி காற்றின் தரம் குறைந்து, காற்றில் மாசு அதிகரித்திருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து சென்னையில் உள்ள 8 இடங்களில் காற்றின் தரத்தை கணக்கிட்டு கண்காணித்து வருகிறது.
அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாள் கணக்கீட்டின் படி 48 என்ற அளவில் இருந்த சராசரி காற்றின் தரம், நேற்று 89 என்ற அளவிலும், இன்று 150 என்ற அளவிலும் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக, மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.